அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… வில்லன் ரோலில் நடிக்கப்போகும் முன்னணி தமிழ் நடிகர் யார் தெரியுமா?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது. ‘தெறி’ ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது.

‘பிகில்’ படத்தை அடுத்து அட்லியின் சாய்ஸ் எந்த கோலிவுட் ஹீரோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த முறையும் ஒரு டாப் ஹீரோ தான் அட்லியின் சாய்ஸாக இருந்தது. அதோடு ஒரு ட்விஸ்ட்டும் வைத்தார். இந்த முறை பாலிவுட் படத்துக்காக அங்குள்ள டாப் ஹீரோவை டிக் அடித்திருக்கிறார் அட்லி. அவர் தான் ஷாருக்கான். ‘ஜவான்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். கெஸ்ட் ரோலில் தீபிகா படுகோன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் க்ரொவெர் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிக்க பிரபல நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை அடுத்த ஆண்டு (2023) ஜூன் 2-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர்.

Share.