மகனின் முதல் பர்த்டேவை கொண்டாடி மகிழ்ந்த ‘மாரி 2’ வில்லன் டொவினோ… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தனுஷின் ‘மாரி 2’ (தமிழ்) படத்தில் வில்லனாக மிரட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது டொவினோ தாமஸ் நடிப்பில் ‘மின்னல் முரளி, கானேகானே, குருப், வழக்கு, நாரதன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘மின்னல் முரளி’ படத்தை இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கி வருகிறாராம். இதில் டொவினோ தாமஸ் ‘சூப்பர் ஹீரோ’வாக வலம் வரவுள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், பிஜுகுட்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசையமைக்கும் இதற்கு சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார், லிவிங்க்ஸ்டன் மேத்யூ படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை ‘வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரெடியாகுகிறதாம். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு லிடியாவை திருமணம் செய்து கொண்டார் டொவினோ தாமஸ். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது, டொவினோ தாமஸ் மகனின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

1

2

3

4

Share.