ஜூனில் துவங்கும் சீசன் 5… ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் செல்லும் முதல் திருநங்கை!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அடுத்ததாக ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குவாரா? என்று தெரியவில்லை. ஏனெனில், இப்போது அரசியலில் பிஸியாக இருக்கும் கமல், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுக்கு பின்னரே ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தொடர்பாக யோசிக்க முடியும் என்று சொல்லி விட்டாராம். மேலும், கமல் நோ சொல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஆகையால் இந்த சீசனை தொகுத்து வழங்க பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான சிலம்பரசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் அதர்வா, நடிகர் சித்தார்த், நடிகர் ராதா ரவி, நடிகர் பழ. கருப்பையா, நடிகர் நகுல், நடிகை ஸ்ரீரெட்டி, நடிகை பூனம் பாஜ்வா, நடிகை ராய் லக்ஷ்மி, நடிகை சோனா, நடிகை ராதா, நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ‘குக் வித் கோமாளி’ அஷ்வின் – ஷிவாங்கி – புகழ் – தர்ஷா குப்தா – பவித்ரா லக்ஷ்மி – கனி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் ஃபேமஸான நடிகை ஹேமா, ‘கடைக்குட்டி சிங்கம்’ டிவி சீரியல் மூலம் ஃபேமஸான நடிகர் முஹம்மது அஸீம், ‘சூப்பர் சிங்கர்’ சாம் விஷால் ஆகிய 20 பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த பட்டியலில் பிரபல நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளும், திருநங்கையுமான மிலாவின் பெயரும் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு வேளை மிலா கலந்து கொண்டால், ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் செல்லும் முதல் திருநங்கை இவராகத்தான் இருக்கும்.

Share.