இரண்டு முறை விக்ரம் படத்தை பார்த்த முன்னணி நடிகை !

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

கடந்த வாரம் படம் வெளியான அன்றே சினிமா பிரபலங்களுக்காக பிரத்யேகக் காட்சி ஒன்று நடைபெற்றது. அதில் பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டினர். அதில் கலந்து கொள்ள முடியாவர்கள் தியேட்டர்களில் படத்தைப் பார்த்தார்கள்.

கமல்ஹாசனுடன் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஜோடியாக நடித்த த்ரிஷா ‘விக்ரம்’ படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறார். சென்னையில் உள்ள எஜிஎஸ் தியேட்டரில் தனது தோழிகளுடன் படத்தைப் பார்த்த த்ரிஷா, படத்தின் என்ட் டைட்டிலை வீடியோவாக எடுத்து எஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்து ‘ரவுண்ட் 2, விக்ரம்’ என நெருப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

Share.