தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகும் த்ரிஷாவின் த்ரில்லர் படம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இப்போது, த்ரிஷா நடிப்பில் ‘பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை 2, ராம், பொன்னியின் செல்வன்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ரிலீஸுக்காக நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருஞானம் இயக்கியுள்ள இப்படத்தை வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இதனால் நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

இந்த தகவலை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ நிறுவனமே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் புதிய ட்ரெய்லரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

Share.