சாய் பல்லவி படத்தை புகழ்ந்த உதயநிதி !

கஸ்தூரி மான் , தாம் தூம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சாய் பல்லவிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . நேரடி தமிழ் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் . பிரேமம் படத்திற்கு பிறகு களி என்கிற படத்தில் நடித்தார் அதன் பிடா என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் . தமிழில் தியா என்கிற படத்தில் நடித்தார் , நடிகர் தனுஷுடன் இணைந்து மாறி 2 , சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் .

சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஷியாம் சிங்காராய் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .இவர் நடிப்பில் விராட பர்வம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .

நீண்ட இடைவேளைக்கு பிறகு சாய் பல்லவி தற்போது தமிழ் படத்தில் நடித்துள்ளார் . அந்த படத்தின் பெயர் கார்கி . கவுதம் இராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை சக்தி பிலிம் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகிறது .வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் உதயநிதி இந்த படத்தை பார்த்து விட்டு புகழ்ந்து பதிவிட்டுள்ளார் . பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் .

Share.