உதயநிதி நடிக்க மறுத்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி !

வீட்ல விசேஷம் படம் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான பதாய் ஹோவின் ரீமேக் ஆகும். ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து போனி கபூர் இப்படத்தை தயாரித்து இருந்தார் .

வீட்லா விசேஷம் படம் திரைப்படம் 17 ஜூன் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் நடிகர்களின் நடிப்பு, கதை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் நகைச்சுவை ஆகியவற்றிற்காக பாராட்டி வணிக ரீதியாக வெற்றி பெற்றது .

இந்நிலையில் வீட்ல விசேஷம் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க ஒப்புதல் தருமுன் தயாரிப்பாளர் போனி கபூர் முதலில் நடிகர் உதயநிதியை நடிக்க வைக்க முயன்றுள்ளார் ஆனால் உதயநிதி இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் . பிறகு ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் நாயகனாக நடித்து பெரிய வெற்றியை பெற்றார் .

Share.