“தடுப்பூசியிட்டுக்கொள்வோம், கொரோனாவை விரட்டுவோம்”… உதயநிதி ஸ்டாலின் போட்ட ட்வீட்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நடிகரும், திமுக-வின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டிருந்தார். கடந்த மே மாதம் 2-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளி வந்தது. உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றார்.

தற்போது, நடிகரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா தொற்றுக்கு எதிரான போர்க்களத்தில் தடுப்பூசியே முதல்வரிசை பாதுகாப்பு ஆயுதம். ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்றைய தினம் 2-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டேன். தடுப்பூசியிட்டுக்கொள்வோம், கொரோனாவை விரட்டுவோம். நன்றி” என்று கூறியுள்ளார்.

Share.