உதயநிதி – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘கலகத் தலைவன்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த மோஷன் போஸ்டர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே, மாமன்னன்’ மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரெல்லி இசையமைத்து வருகின்றனர்.

இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், இந்த படத்துக்கு ‘கலகத் தலைவன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை உதயநிதியே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.