உதயநிதி – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகும் ‘நெஞ்சுக்கு நீதி’… வெளியானது மோஷன் போஸ்டர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

ஹிந்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அதிக எக்ஸ்பெக்டேஷன் உள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும், ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஆரி – சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ‘ராட்சசன்’ சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது, இந்த படத்துக்கு ‘நெஞ்சுக்கு நீதி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் மோஷன் போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Share.