உதயநிதி ஸ்டாலின் – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே, மாமன்னன்’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படம் இன்று (மே 20-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஆரி – சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ‘ராட்சசன்’ சரவணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ள இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

\

Share.