உதயநிதி – அருண்ராஜா காமராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே, மாமன்னன்’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

ஹிந்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அதிக எக்ஸ்பெக்டேஷன் உள்ளது. ‘நெஞ்சுக்கு நீதி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஆரி – சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ‘ராட்சசன்’ சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த டத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், இன்று (மே 9-ஆம் தேதி) படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மே 20-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.