தளபதி 66 படத்தில் நிகழ்ந்த திடீர் மாற்றம்

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை நடித்து முடித்துள்ளார் . இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது . இந்த படத்தின் முன்பதிவு தமிழ்நாடு முழுவதும் விறு விறுப்பாக நடந்து வருகிறது . பல இடங்களில் முன் பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் முடிவடைந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66″ படம் சில தினங்களுக்கு பூஜையுடன் தொடங்கியது . இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்குஜோடியாக நடிக்கிறார் . நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

தளபதி 66 படத்திற்கு முதலில் தமிழ் வசனங்களை இயக்குனர் ராஜூமுருகன் எழுதுவதாக செய்திகள் வெளியாகின . இவர் ஏற்கனவே வம்ஷி இயக்கத்தில் வெளியான தோழா திரைப்படத்தில் வசனம் எழுதி இருக்கிறார் . ஆனால் தற்பொழுது நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை ராஜூமுருகன் இயக்க உள்ளதால் தளபதி 66 படத்தில் இருந்து ராஜூமுருகன் விலகிவிட்டார்.

இதன் காரணமாக தளபதி 66 படத்தின் வசனத்தை பாடலாசிரியர் விவேக் எழுத்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது . இதனை மகிழ்ச்சியுடன்பகிர்ந்துள்ளார் விவேக்.

Share.