இதுவரை நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது. ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை ரஜினிகாந்த் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள் இதோ…

1.நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு ஆங்கில மொழி பேசக் கற்றுக் கொடுத்தது, அவருடன் பள்ளியில் படித்த நண்பர் குண்டண்ணா என்பவர் தானாம்.

2.நடிகர் ரஜினி ஸ்கூல் படிக்கையில், ‘எச்சம்மா நாயகா, சான்கான்’ என இரண்டு நாடகங்களில் நடித்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறாராம்.

3.நடிகர் ரஜினி பெங்களூரில் உள்ள அவரது அண்ணன் சத்யநாராயண ராவ்வின் வீட்டுக்கு எப்போது சென்றாலும், அவர் சூப்பர் ஸ்டாருக்கு சிக்கன் பிரியாணி செய்து கொடுப்பாராம்.

4.நடிகர் ரஜினி அவரது மனைவி லதாவை ‘ஜில்லு’ என்று தான் அழைப்பாராம்.

5.நடிகர் ரஜினிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது ரசிகர்கள் பற்றி ‘For The Love Of a Man’ என்ற ஆவணப்படம் 2014-யில் ரிலீஸானது.

6.நடிகர் ரஜினி நடிக்கும் படங்கள் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் ஆகி ரிலீஸாவது வழக்கம். ரஜினி படங்களின் தெலுங்கு வெர்ஷனுக்கு பாடகர் மனோவும், ஹிந்தி வெர்ஷனுக்கு மயூர் வியாஸும் டப்பிங் பேசுவார்களாம்.

7.நடிகர் ரஜினி – இயக்குநர் ஷங்கர் காம்போவில் 2007-யில் வெளியான படம் ‘சிவாஜி’. அந்த படத்துக்காக ரஜினி ரூ.26 கோடி சம்பளம் வாங்கினாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கிச்சானுக்கு அடுத்த படியாக அதிக சம்பளம் வாங்கியது நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ தானாம்.

8.நடிகர் ரஜினி 1978-யில் மட்டும் தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் 21 படங்களில் நடித்து மாஸ் காட்டினாராம்.

9.நடிகர் ரஜினி ‘பிளட்ஸ்டோன்’ (Bloodstone) என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறாராம். இப்படம் 1988-யில் ரிலீஸானது.

10.1993-யில் வெளியான ‘வள்ளி’, 2002-யில் வெளியான ‘பாபா’ ஆகிய இரண்டு படங்களுக்குமே ரஜினியே கதை-திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்திருந்தாராம்.

11.நடிகர் ரஜினியின் ‘முத்து’ படம் ஜப்பானிலும் வெளியாகி, அங்கு அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.

12.2002-யில் ரஜினி கதை-திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்த ‘பாபா’ படம் தோல்வி அடைந்தது. அப்போது, ரஜினியே அந்த படத்துக்கான நஷ்ட ஈடு தொகையை கொடுத்தார்.

13.நடிகர் ரஜினியின் வாழ்க்கை பயணம் குறித்து ‘கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார்’ என்ற டைட்டிலில் ஒரு பாடமாக CBSE பாட புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

14.நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ மற்றும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.

15.2018-ஆம் ஆண்டு நடிகர் ரஜினி – இயக்குநர் ஷங்கர் காம்போவில் உருவான ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸானதாம்.

16.நடிகர் ரஜினி 2005-யில் வெளியான ‘சந்திரமுகி’-யிலிருந்து படங்களில் மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டாராம்.

17.நடிகர் ரஜினி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து விட்டார். ஆனால், இதுவரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லாலுடன் இணைந்து ரஜினி ஒரு படம் கூட நடிக்கவே இல்லை.

18.நடிகர் ரஜினியின் சினிமா கேரியரில் அவரது பிறந்த நாளன்றே (டிசம்பர் 12-ஆம் தேதி) ரிலீஸான ஒரே ஒரு திரைப்படம் ‘லிங்கா’ மட்டும் தானாம். இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்த இந்த படம் 2014-யில் ரிலீஸானது.

19.நடிகர் ரஜினி இதுவரை 19 படங்களில் (தமிழ் – 15, ஹிந்தி – 2, கன்னடம் – 1, தெலுங்கு – 1) கெஸ்ட் ரோலில் வலம் வந்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

20.நடிகர் ரஜினிக்கு ஸ்ரீ ரமண மகரிஷி குறித்து வெளியான புத்தகங்கள் பிடிக்குமாம்.

Share.