இதுவரை யாரும் பார்த்திராத பாடகர் பம்பா பாக்யா அவர்களின் அரிய புகைப்பட தொகுப்பு!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகராய் இருப்பவர் பம்பா பாக்யா . இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இவர் பாடிய சிம்டாங்காரன் என்கிற பாடல் பெரிய அளவில் கொண்டப்பட்ட பாடல் . இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் .

அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் சூப்ப ர்ஸ்டார் ரஜினி நடித்த 2.o என்கிற படத்தில் புள்ளினங்காள் என்கிற பாடலை பாடினார் . இவரது அழகிய குரலில் இந்த பாடல் ரசிகர்களின் மனதை வருடும் அளவிற்கு இருக்கும். மேலும் சமீபத்தில் வெளியான அன்பறிவு என்கிற படத்தில் கலங்காதே என்கிற பாடலும் பாடி இருந்தார் .

இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடல் ஓப்பனிங் வரிகளை இவர் தான் பாடி இருந்தார் . சில நாட்களுக்கு முன் வரை பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் இவரை காணமுடிந்தது .

இந்நிலையில் தற்போது பம்பா பாக்யா அவர்கள் இறந்து விட்டார் என்கிற செய்தி உறுதியாகி உள்ளது . உடல்நலக்குறைவு காரணமாக இவர் காலமானார் என்று கூறப்படுகிறது .

பாடகர் பம்பா பாக்யா அவர்களின் யாரும் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு காண்போம் :

Share.