தனுஷுக்கு இணையாக சம்பளம் வாங்கிய நடிகை !

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து நாயகனாக நடித்து இருந்தார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தனர் . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார் .

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . நடிகர் விவேக் நடித்து வெளியான கடைசி படமும் இது தான் . இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . மேலும் படம் சுமாரான வசூலையும் பெற்றது . இந்நிலையில் தி லெஜண்ட் படத்தில் நாயகியாக நடித்த ஊர்வசி ராவ்டேலா அவர்களுக்கு சம்பளமாக 20 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது .

Share.