வடசென்னை படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை முதலில் குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்து இருந்தார் . ஆனால் பல காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை . இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார் . வெற்றிமாறன் மற்றும் இளையராஜா இணையும் முதல் படமாக இந்த படம் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு எழுந்துள்ளது .

விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்க இருக்கிற படம் வாடிவாசல் . நடிகர் சூர்யா இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் சமீபத்தில் நடந்த திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன் வாடிவாசல் படத்திற்கு பிறகு அவர் இயக்கும் படம் வட சென்னை 2 என்று உறுதியாக சொல்லி உள்ளார் .இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை – முதல் பாகத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனம் வாங்கியது அனைவரும் அறிந்ததே . இந்நிலையில் வடசென்னை படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் உரிமத்தை 5.50 கோடிக்கு விற்றுள்ளது படக்குழு .

Share.