வடிவேலு – சுராஜ் காம்போவில் உருவாகும் காமெடி வெப் சீரிஸ்… எந்த OTT தளத்தில் ரிலீஸ் தெரியுமா?

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சமீபத்தில், ‘ஆஹா’ என்ற பிரபல OTT தளத்தில் ஒரு அசத்தலான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தெலுங்கில் பாப்புலரான ‘ஆஹா’ OTT தளத்துக்கென தமிழில் தனியாக ஒரு சேனல் மிக விரைவில் ஆரம்பமாகப்போவது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுராஜ் இயக்கிய ‘தலைநகரம்’ படத்தில் ‘நாய் சேகர்’, ‘மருதமலை’ படத்தில் ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘கத்தி சண்டை’ படத்தில் ‘டாக்டர் பூத்ரி’ போன்ற கதாபாத்திரங்களில் வலம் வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. தற்போது, புதிய காமெடி வெப் சீரிஸுக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளது. இவ்வெப் சீரிஸ் பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸாகுமாம்.

Share.