‘சந்திரமுகி 2’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் படத்தின் காமெடி காட்சியை ரீ-கிரியேட் செய்து அசத்திய வடிவேலு!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

இப்போது வடிவேலு நடிப்பில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சந்திரமுகி 2’வை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு இயக்கி வருகிறார்.

இதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், ரவிமரியா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனை சுபாஷ்கரன் தனது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மூலம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

இதன் ஷூட்டிங் மைசூரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சந்திரமுகி 2’வின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வடிவேலு விஜய்யின் ‘சுறா’ படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியை ரீ-கிரியேட் செய்து அசத்தியுள்ளார்.

Share.