துப்பறிவாளனாக மாறப்போகிறாரா வடிவேலு?… தீயாய் பரவும் ‘டிடெக்டிவ் நேசமணி’ போஸ்டர்!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சமீபத்தில், ‘ஆஹா’ என்ற பிரபல OTT தளத்தில் ஒரு அசத்தலான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தெலுங்கில் பாப்புலரான ‘ஆஹா’ OTT தளத்துக்கென தமிழில் தனியாக ஒரு சேனல் மிக விரைவில் ஆரம்பமாகப்போவது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் வடிவேலு ‘டிடெக்டிவ் நேசமணி’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், அப்படத்தை இயக்குநர் ராம்பாலா இயக்குகிறார் என்றும் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த தயாரிப்பாளர் சி.வி.குமார் ட்விட்டரில் “Fake news-ஆ இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா” என்று கூறியுள்ளார்.

Share.