‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு… கொண்டாட்டத்தில் வடிவேலு ரசிகர்கள்!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

வடிவேலுவின் ரசிகர்கள் பல மாதங்களாக இவரின் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்று வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தற்போது, இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ‘S பிக்சர்ஸ்’ ஷங்கர் அவர்கள் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் பார்ட் 2-வில் நடித்த நடிகர் திரு.வடிவேலு மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் திரு.வடிவேலு மற்றும் ‘S பிக்சர்ஸ்’ நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், வடிவேலு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.