அரபிக் குத்து பாடலால் அப்செட் ஆன வைரமுத்து !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் .இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படம் வெளியான முதல் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் அனிருத்தின் இசை இந்த படத்திற்கு மிக பெரிய பலம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அரபிக் குத்து மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . குறிப்பாக அரபிக் குத்து பாடலை இதுவரை 300 மில்லியன் பார்வையாளர் பார்த்து உள்ளனர் . இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் . இந்த பாடல் முழுக்க முழுக்க வேற்று மொழியில் உருவாகி உள்ள இந்த பாடலை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழில் பெயரிடாத ஒரு படத்தில் தமிழில் எழுதாத பாடல் வரிகள் வந்து கொண்டு இருக்கின்றன .இங்குள்ள ஹீரோக்களுக்கு இதுவெல்லாம் உறுத்தலாக இருக்காதா என பேசி வறுத்த பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . வேற்று மொழிகளில் தலைப்பு வைப்பது பாடல் எழுதுவது போன்ற வழக்கங்கள் எப்பொழது மாறும் என்ற கேள்வி பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share.