மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா… அவரை நேரில் சென்று பார்த்த வைரமுத்து!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பாரதிராஜா. இவர் ’16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

பாரதிராஜா நடிகராக ‘ஆய்த எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப் பிள்ளை, ஈஸ்வரன், ராக்கி, குற்றம் குற்றமே’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘திருச்சிற்றம்பலம்’.

தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது, பாரதிராஜாவை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து வந்த ‘கவிப்பேரரசு’ வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன்.

நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார். கலையுலகை ஆண்டு வருவார்” என்று கூறியுள்ளார்.

Share.