அடேங்கப்பா… ‘வலிமை’ பட ஹீரோயின் ஹூமா குரேஷியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹூமா குரேஷி. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இப்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் இதனை தயாரித்துள்ளார்.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம். இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷியின் சொத்து மதிப்பு ரூ.22.45 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.