ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்கின் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த ‘வலிமை & மாஸ்டர்’!

இந்த ஆண்டு (2021) ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்திய அளவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்கின் டாப் 10 லிஸ்டை ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த லிஸ்டில் ‘வலிமை’ படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர் மற்றும் ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர் மற்றும் ‘நாங்க வேற மாரி’ என்ற பாடல் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

அடுத்ததாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்த லிஸ்டில் ‘மாஸ்டர்’ படம் தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்து இந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸான ‘மாஸ்டர்’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்த லிஸ்டில் ‘அஜித்குமார்’ பெயர் தான் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் ‘தளபதி 65’ படம் தான் இருக்கிறது. விஜய்யின் 65-வது படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

Share.