‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… ஒரு பாடல் காட்சிக்கே இத்தனை கோடியில் செட்டா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் நாளை (ஏப்ரல் 13-ஆம் தேதி) ரிலீஸாகவுள்ளது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் சரத்குமார் நடிக்கிறாராம். இதற்கு தமன் இசையமைக்கிறார்.

இதன் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, சென்னையில் ஷூட் செய்து வரும் பாடல் காட்சியின் செட்டுக்கு மட்டுமே ரூ.4.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share.