வனிதா – ரம்யா கிருஷ்ணன் இடையே மோதல்… தீயாய் பரவும் ‘பிக் பாஸ்’ ஜோடிகள் நிகழ்ச்சியின் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. அது தான் ‘சந்திரலேகா’. இந்த படத்துக்கு பிறகு நடிகை வனிதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

வனிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, வனிதா விஜயகுமார் நடிப்பில் ஐந்து தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற ஷோவில் கலந்து கொண்டார் வனிதா. ‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி கடந்த மே மாதம் 2-ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் பாப்புலர் நடிகர் நகுலும், பாப்புலர் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தான் நடுவர்களாம்.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி வனிதா விஜயகுமார் ட்விட்டரில் “பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுகிறேன்” என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரம்யா கிருஷ்ணனிடம் வனிதா “don’t compare contestants” என்று சொல்கிறார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் “what is a competition.. compare பண்ணக் கூடாதுன்னு எப்படி சொல்லலாம் யாராவது?” என்று கோபமாக பேசுகிறார். இதனைத் தொடர்ந்து வனிதா எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்கிறார்.

Share.