“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனே தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சினேகன், தாமரைச் செல்வி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், வனிதா, தாடி பாலாஜி, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, நிரூப் ஆகிய 14 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். நேற்று (பிப்ரவரி 13-ஆம் தேதி) சுஜா வருணி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, இதன் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் வனிதா – ஷாரிக் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. பின், கன்ஃபஷன் ரூமில் கதறி அழுகிறார் வனிதா. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.