ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

கோலிவுட் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர். இவர் தயாரிப்பில் ‘நளனும் தமயந்தியும்’ ’சுட்டகதை’ ’நட்புனா என்னனு தெரியுமா’ ’முருங்கக்காய் சிப்ஸ்’ உட்பட பல படங்கள் வெளியாகி இருக்கிறது .

இந்த நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் படத்தயாரிப்பு மட்டுமின்றி சில யூடியூப் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி இருந்தார் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மையமாக வைத்து ஒரு நிகழ்ச்சியிலும் இவர் பங்காற்றினார் . இந்நிலையில் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் நடிகை மஹாலட்சுமி அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது . இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகரனை மறைமுகமாக தாக்கியுள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார். இதற்கு காரணம் வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துக் கொண்ட போது, அதனை கடுமையாக விமர்சித்து இருந்தார் ரவீந்தர் சந்திரசேகரன்.

இருவரும் இணையத்தில் நேரலையில் கருத்து மோதல் ஈடுபட்டு இருந்தனர் இது மக்கள் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வனிதா, ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பிஸியாகவும் இருக்கிறேன். கர்மா ஒரு பி*ச்… கர்மாவிற்கு திருப்பி கொடுக்க தெரியும் .. நான் அவளை முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது .

Share.