மீண்டும் களமிறங்கியிருக்கும் வனிதா விஜயகுமார்- அதிரடியான பதில்கள்!

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.

பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள்.இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.

இவர் ட்விட்டரிலிருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்று யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தனக்கு வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் சமையல் ரெசிபி பற்றிய வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

தனது பிரச்சனையை சாதகமாக்கி சமூக வலைத்தளத்தில் அதிக வியூஸ்களை பெற்றுவரும் வனிதா விஜயகுமார், தனது யூடியுப் வீடியோவில் கமெண்ட் செக்ஷனில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகிறார்.

தற்போது அதில் ஒருவர் தனது மனைவியும் குக்கரி தொடர்பான படிப்பை படிக்க வேண்டும் என்று விருப்பப்படுவதாகவும் இவர் எங்கு படித்தார் என்பது குறித்த விவரங்கள் கூறினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வேறொருவர் “நீங்கள் குக்கரி படித்தீர்கள் என்பதற்கான ப்ரூஃப் ஏதும் உள்ளதா? நாங்கள் எப்படி நம்புவது? நான் கூட ஆக்ஸ்போர்டில் படித்தேன் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் நிரூபிக்க வேண்டியது அவசியம்” என்று வனிதாவை வம்பிழுத்து கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு அதிரடியாக பதிலளித்துள்ள வனிதா ” நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் என் முதலாளி இல்லை. நானே எனக்கு ராஜா” என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

Share.