வைரலாகும் வனிதா விஜயகுமாரின் வித்தியாசமான ஹேர் கட் புகைப்படங்கள்!

சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும். இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.

வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து மீண்டும் பீட்டர் பாலை பிரிந்த வனிதா, தற்போது தன் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இருப்பினும் இவர் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவான ஒரு நபர்‌.

தற்போது மிகுந்த சோகத்தில் இருந்து வந்த வனிதா இனிமேல் தான் அதிலிருந்து மீண்டு விட்டதாகவும், அதை பிரதிபலிக்கும் விதமாக தன் முடிக்கு கலரிங் செய்துள்ளதாகவும், மேலும் புதிய டாட்டூ ஒன்றையும் குத்தியுள்ளதாகவும் கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வளவு விரைவாக இவர் சோகத்திலிருந்து இவர் மீண்டது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், பலரது பாராட்டையும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Share.