டாப் ஸ்டாரின் த்ரில்லர் படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் ‘பிக் பாஸ்’ வனிதா!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. அது தான் ‘சந்திரலேகா’. இந்த படத்துக்கு பிறகு நடிகை வனிதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

வனிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, வனிதா விஜயகுமார் நடிப்பில் ஆறு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் தியாகராஜன் இயக்கி, தயாரிக்கும் ‘அந்தகன்’ படத்தில் ஹீரோவாக அவரது மகன் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த் நடித்து வருகிறார். இந்த படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்காம். இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது, இந்த படத்தில் இடம்பெறும் தனது காட்சிகளுக்கு முக்கிய ரோலில் நடிக்கும் வனிதா டப்பிங் பேச ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை வனிதாவே இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share.