நீங்கள் ஒரு ஜீனியஸ் !

1989வது ஆண்டு வெளியான புதிய பாதை என்கிற படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன் . இவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் என்ற பெயருடன் கோலிவுட்டில் வளம் வருகிறார் . இவர் தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்து வருகிறார் . அந்த வகையில் தற்போது இவர் இயக்கி இருக்கும் படம் இரவின் நிழல் . இந்த படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது . மேலும் எடிட்டர் இல்லாமலே இந்த தயாராகி உள்ளது . இயக்குனர் A.R.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இந்நிலையில் இரவின் நிழல் படம் இன்று வெளியாகி உள்ளது . படத்திற்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர் . படத்தை பார்த்த பலரும் ஒரே ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது என்று ஆச்சரியத்துடன் கூறி செல்கிறார்கள் . இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து இருக்கிறார் .

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபனை ஜீனியஸ் என்று புகழ்ந்து உள்ளார் மேலும் படத்தின் இசையமைப்பாளரான ரகுமானை லெஜெண்ட் என்று குறிப்பிட்டுள்ளார் வரலக்ஷ்மி. இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

Share.