50 செலிப்ரிடீஸ் இணைந்து வெளியிட்ட வரலட்சுமி சரத்குமாரின் திரைப்பட போஸ்டர்!

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் ஆவதும் நடிகர்கள் இயக்குனர்கள் ஆவதும் அவ்வப்போது நடந்து வரும் ஒரு விஷயம். ஆனால் பெண் நடிகைகள் இயக்குனர்கள் ஆவது அவ்வளவு எளிதில் சாத்தியமல்ல.

அப்படி சாத்தியமில்லாத விஷயத்தை தற்போது செய்திருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த இவர் தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

இவர் “கண்ணாமூச்சி” என்ற படத்தை தற்போது இயக்குகிறார். இவரின் இந்த முயற்சியை ஆதரிக்கும் விதமாக செலிபிரிட்டி 50 பேர் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிரம்மாண்டமாக இந்த திரைப்படத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, ஜோதிகா, திரிஷா, சமந்தா, ராதிகா, அரசியல் பிரபலம் கனிமொழி, அதிதி ராவ் ஹைதாரி, விளையாட்டு வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா உள்ளிட்ட 50 பிரபலங்கள் இந்த போஸ்டரை வெளியிட்டு இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

இவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி வரலட்சுமி சரத்குமார் பதிவை வெளியிட்டுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தை வரலட்சுமி சரத்குமார் இயக்குகிறார், சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

Share.