‘சண்டகோழி 2’வில் வில்லியாக மிரட்டிய வரலக்ஷ்மி… இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.

அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி’ என படங்கள் குவிந்தது.

வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. வரலக்ஷ்மியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சண்டக்கோழி 2’.

விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் வரலக்ஷ்மி வில்லியாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். தற்போது, இந்த படத்துக்காக நடிகை வரலக்ஷ்மி ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.