சிம்புவுக்காக களமிறங்கும் ரஜினி !

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது . இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற 06-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருந்தது . தற்பொழுது இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . வேல்ஸ் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது மேலும் ரஜினி மற்றும் கமல் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது .

Share.