ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்வுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்ட முன்னணி இயக்குனர் !

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் மாநாடு . இந்த படம் சிம்புவின் திரைவாழ்க்கையில் இந்த படம் முக்கியமான படமாக அமைந்துள்ளது . மாநாடு படத்திற்கு பிறகு இவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார் . அந்த படத்தில் நாகசைதன்யா நடித்து வருகிறார் .இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது .

மாநாடு படத்திற்கு பிறகு மன்மத லீலை என்கிற படத்தை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு . அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் தமிழ் படம் பற்றின செய்திகள் வெளியாகி இருக்கிறது . மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது .வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும் கூறப்பட்டது ஆனால் அந்த கதையில் ரஜினி நடிக்கவில்லை .தற்பொழுது ரஜினி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து உள்ளார் . இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படம் எடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை பற்றி பேசி உள்ளார். அதில் விஜய் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் . ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் படங்களை பார்க்கும்போது எனக்கு விஜய் நினைவுக்கு வருவார் , வில் ஸ்மித் ஸ்டைலில் விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணனும் ; விஜய்யின் ஸ்டார் அந்தஸ்து இப்போது அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது எனவே அவருக்காக ஒரு வித்தியாசமான கதையை விரைவில் உருவாக்குவேன் என்று தெரிவித்துள்ளார் .

Share.