திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகிறதா அஜித்தின் ‘மங்காத்தா’?… வெங்கட் பிரபு போட்ட ட்வீட்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

நடிகர் ‘தல’ அஜித் – இயக்குநர் வெங்கட் பிரபு காம்போவில் ‘மங்காத்தா’ என்ற படம் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியானது. இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. தற்போது, ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் “ஆகஸ்ட் 31-ஆம் தேதி ‘மங்காத்தா’ தினம். ரீ-ரிலீஸ் பண்ணி விடுங்க தலைவா” என்று கேட்டிருந்தார். அதற்கு வெங்கட் பிரபு “எனக்கும் ஆசை தான்!! ‘சன் பிக்சர்ஸ்’ மனசு வைக்கணுமே” என்று பதில் கூறியுள்ளார்.

Share.