வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ‘மக்கள் செல்வன்’… ஆனா, ஒரு ட்விஸ்ட்!?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். 2007-ஆம் ஆண்டு ‘பொல்லாதவன்’ படத்தில் துவங்கிய இவரின் வெற்றிப் பயணம், ‘ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்’ வரை தொடர்ந்திருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கிய ஐந்து படங்களில், பிரபல நடிகர் தனுஷ் தான் நான்கு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம், சூர்யாவின் ‘வாடிவாசல்’, தனுஷ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சூரி படத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க பாரதிராஜா முதலில் ஒப்பந்தமானார்.

பின், அவர் இந்த படத்தில் இருந்து விலகியதும், அந்த ரோலில் கிஷோர் நடிக்க உள்ளார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இந்த கேரக்டரில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வயதான லுக் என்பதால் இதற்கென ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட் நடந்ததாக சொல்லப்படுகிறது.

Share.