வெற்றிமாறன் ஆட்டம் ஆரம்பம் !

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படைப்பின் மூலம் இந்திய சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றிமாறன் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன் . தனுஷ் நடிப்பில் வெளியான இந்த படம் 100 கோடி வசூல் செய்தது மட்டுமில்லாமல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படத்தினை நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து இயக்குவதாக அறிவித்தார் . விடுதலை என்று படத்தின் தலைப்பை வைத்தார்கள் .கொரோனா தொற்றின் காரணமாக இந்த படப்பிடிப்பு தாமதம் ஆனது . மேலும் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் இந்த படத்தில் நடித்துள்ளார்.


தற்பொழுது விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 28ஆம் தொடங்குகிறது . பிரமாண்டமாக போடப்பட்டுள்ள கிராமத்து செட்டில் நடிகர் சூரி , விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் நடிக்கிறார்கள் . இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்குகிறார் .மேலும் படத்தின் அடுத்த அடுத்த செய்திகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Share.