வெற்றியின் ‘ஜீவி 2’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றி. இவர் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜீவி’. இந்த படத்தை இயக்குநர் VJ.கோபிநாத் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இதன் இரண்டாம் பாகமான ‘ஜீவி 2’ நேற்று (ஆகஸ்ட் 19-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘ஆஹா’வில் ரிலீஸானது. இதையும் VJ.கோபிநாத்தே இயக்க, மிக முக்கிய ரோல்களில் கருணாகரன், அஷ்வினி சந்திரசேகர், மோனிகா, ரோகினி, மைம் கோபி, ரமா, YG.மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை ‘ஆஹா’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

 

Share.