வெற்றியின் சைக்கோ த்ரில்லர் படமான ‘மெமரீஸ்’… வெளியான செம்ம மாஸ் தகவல்!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே வித்தியாசமான த்ரில்லராக கொடுத்து அப்ளாஸ் வாங்கியவர் நடிகர் வெற்றி. முதல் படத்தின் வெற்றியை, அடுத்த படமும் பெற வேண்டும் என்று அதற்கும் வித்தியாசமான கதைக்களத்தை செலக்ட் செய்து நடித்தார். வெற்றியின் இரண்டாவது படமான ‘ஜீவி’-யும் சூப்பர் ஹிட்டானது.

‘ஜீவி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் வெற்றிக்கு அடித்தது ஜாக்பாட். இப்போது வெற்றியின் நடிப்பில் ‘C/O காதல், வனம், மெமரீஸ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மெமரீஸ்’ படத்தை ஷ்யாம் பிரவீன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் என்பவர் நடிக்கிறார்.

மேலும், முக்கிய ரோல்களில் ஹரீஷ் பெராடி மற்றும் ரமேஷ் திலக் நடிக்கின்றனர். சைக்கோ த்ரில்லர் ஜானர் படமான இதற்கு அஜயன் பாலா வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 3-ஆம் தேதி) முதல் திருவனந்தபுரத்தில் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.