நடிகை வித்யூராமனின் அசத்தல் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன்வசந்தம்” என்ற படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் வித்யூராமன். அந்தப்படத்தில் நல்ல நடிப்பிற்காக மிகவும் பாராட்டப்பட்ட வித்யூராமன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் குணச்சித்திர நடிகராக கால் பதித்துள்ளார். தற்போது வித்யூராமன் திருமண செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வித்யூராமனுக்கு கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஃபிட்னஸ் மற்றும் நியூட்ரிஷன் எக்ஸ்பர்ட் சஞ்சய் என்பவரோடு நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது. விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து தற்போது இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கல்யாண கலையில் ஜொலிக்கும் வித்யூராமனின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share.