தனது கணவர் விக்னேஷ் சிவனை கட்டியணைத்தபடி நிற்கும் நயன்தாரா… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றிருந்தார்.

பின், கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் மும்பையில் நடக்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்து கொண்டார். தற்போது, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.