“வா நண்பா வா ” நெல்சனை வாழ்த்திய விக்னேஷ் சிவன்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் , இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்கு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இன்று தலைவர் 169 படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. ஜெயிலர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு அவரின் நெருங்கிய நண்பரான இயக்குனர் விக்னேஷ் சிவன் ” வா நண்பா வா தலைவரோட பெஸ்ட் படமா இது இருக்கனும் ” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Share.