‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ட்வீட் போட்ட விக்னேஷ் சிவன்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்தார். ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் இதனை தயாரித்த்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவது குறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “பெரும்பான்மையான பொது மக்களின் ரசனைகளிலிருந்து தனித்த ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

Share.