‘விஜய் 65’ பட இயக்குநருக்கு பிறந்த நாள்… வாழ்த்திய ரசிகர்கள்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘தல’ அஜித் ஹீரோவாக நடித்த ‘தீனா’. ‘தீனா’வின் சக்சஸ், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை வைத்து ‘ரமணா’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது.

‘ரமணா’வும் சூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரின் லிஸ்டில் இடம் பிடித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பிறகு சூர்யாவுடன் ‘கஜினி, 7ஆம் அறிவு’, ‘தளபதி’ விஜய்யுடன் ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’, ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுடன் ‘ஸ்பைடர்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து மாஸ் காட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். விரைவில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 25-ஆம் தேதி) இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

Share.