‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் ‘விஜய் 65’ பட பூஜை… வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படத்தில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று (மார்ச் 31-ஆம் தேதி) இப்படத்துக்கான பூஜை போடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

Share.