நெல்சன் படத்துக்கு பிறகு ‘விஜய் 66’-ஐ இயக்கப்போவது இந்த டாப் இயக்குநராமே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது, இந்த படத்தை யார் இயக்கப்போகிறார்? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. ‘தேனாண்டாள்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரிடம், இப்படத்தினை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லியை இயக்க சொல்லலாம் என ‘தளபதி’ விஜய்யே சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ‘பிகில், மெர்சல், தெறி’ என மூன்று சூப்பர் ஹிட் படங்களை இக்கூட்டணி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.