உறுதியானது விஜய் லோகேஷ் கூட்டணி !

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது . இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார் . தமன் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் . படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது . மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற இருக்கிறது .

இந்த நிலையில் விஜய் நடிப்பில் அவரது 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அந்த படத்தை தயாரிப்பாளர் லலித் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . இந்த கூட்டணி உறுதியாகி விட்டதாகவும் வருகின்ற அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது .

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார் . அந்த படம்
ஜூன் – 3 ஆம் வெளியாக இருக்கிறது . இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின் விஜய் 67 படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share.